சுவையுடன் மணமும் கொண்ட டீ சாப்பிட எல்லோரும் விரும்புவார்கள். அதற்கு ஒரு யோசனை.
டீ சுவையாக இருக்க
பாலை நன்றாக காய்ச்சிய பிறகு சிறிது தோல் நீக்கிய இஞ்சி, ஏலக்காய் தட்டி போடவும். சிறிது நேரம் கழித்து டீ தூள் போட்டு இறக்கவும்.
புதினா டீ
பால் டீ அல்லது ப்ளாக் டீ போடும் பொழுது அதில் புதினா போட்டால் வாசனையாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்
காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும். பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து, காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து, பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும். (படித்தது)
தேயிலைத் தூள் மணக்க...
2 ஏலக்காயை உடைத்து டீத்தூளில் சேர்த்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது டீயில் போட்டு குடிக்கலாம். இதனால் டீ மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
டிகாஷன் தயாரிக்கும் போது...
டீத்தூள் போடுமுன் தண்ணீரில் ஆரஞ்சுத் தோல்கள் போட்டு அதில் டீ டிகாஷன் தயாரித்தால் சுவையும் மணமுமாக இருக்கும்.
டிகாஷன் ஸ்டிராங்காக இருக்க...
ஒரே ஒரு கல் உப்பைப் போட்டு, காபிபொடி போட்டு டிகாஷன் இறக்கினால் நல்ல ஸ்டிராங்கான டிகாஷன் கிடைக்கும். (படித்தது)
சுக்கு மல்லி காபி:
சுக்கு, மிளகு,கொத்தமல்லி,நன்னாரி,திப்பிலி,வெந்தயம்,சீரகம்,பட்டை, கருபட்டி சேர்த்து ப்ளாக் டீ குடித்தால் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்
நன்றி இனிய இல்லம்
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்