சனி, 19 செப்டம்பர், 2009

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்
1

2

3

4

5

6

7
7

6

5

4

5

3

2

1கிளிக்கவும்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
/

/????
////
போய் பாருங்க


என்னாச்சு சூப்பரா

தமிழ் குர்ஆன்

தமிழ் குர்ஆன் mp3 வடிவில்.
........
........
.......
......
.....
....
...
..
.
.
..................இங்கே கிளிக்கவும்

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம் -ஆர்.கே.தெரெஸா


1.தொப்பை குறைய

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

2.நரம்புகள் பலம் பெற

100 கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மதியம் தயிரில் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். 15 நாட்கள் இதைக் கடைப்பிடிக்கவும்.

குண்டாக இருப்பவர்கள் வெங்காயச்சாறு வெறும் வயிற்றில் அருந்த இதயக்கோளாறை முன்கூட்டியே தடுக்கலாம். 100 கிராம் வெங்காயம் பொதும்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தைத் தயிரோடு சேர்த்து உண்டால் எலும்பு மெலிவு நோய் தடுக்கப்படும்.

3.அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம் பெற

பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், கர்ப்பிணிகள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியமானது. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் இதற்கு பெரும்பங்குண்டு. மனநிலை பாதிப்போ, முதுமையில் ஞாபக மறதி நோயோ ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலுள்ளது.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்

1..பருப்பு வகைகள்

2.பீன்ஸ்

3.வெண்டைக்காய்

4.கறிவேப்பிலை

5.தண்டுக்கீரை

6.முட்டை

7.ஆட்டு ஈரல்

மூளையில் அலுமினியம் சேரக்கூடாது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அலுமினியச் சத்து சேராது. முட்டைக்கோஸ் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஃபோலிக் அமிலத்தால் குணமடைபவை

1.வாழ்க்கையில் வெறுப்பு

2.காக்காய் வலிப்பு

3.மலட்டுத்தன்மை

4.தாம்பத்திய வாழ்வில் வெறுப்பு

எனவே ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளைத் தேர்வு செய்து உண்டு நல்ல பலன் பெறலாமே!

செம்பருத்தியின் மகத்தான மருத்துவம்

செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது.

ஆரோக்கியக் குறிப்புகள்

ஆரோக்கியக் குறிப்புகள்


உள்ளத்துக்கு எழுச்சித் தரும் உணவு

வாழைப்பழம், காளான், உருளைக்கிழங்கு -இவை மூன்றையும் உள்ளத்திற்கு எழுச்சித் தரும் உணவுகள் என அழைக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட மூன்று உணவுகளிலுமுள்ள வைட்டமின் பி-6-ம்,பொட்டாசியமுமே மனக்கவலையை மாற்றி உள்ளத்திற்கு எழுச்சித் தருகிறது. நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம், உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்ப்பார்கள். இவர்கள் காளான் சூப்புடன் சோயாபீன்சை சுண்டலாக ஒரு கப் சாபிடலாம். 5அவாகோடா பழமும் சாப்பிடலாம். மனக்கவலையை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் மேற்கண்ட உணவுகள் தருகின்றன.

மன இறுக்கத்தை அகற்ற...

தசை, நரம்பு மண்டலம்,செரிமானம், இதயம் - இந்த நான்கும் நன்கு இயங்க,தயாபின், ரத்த அணுக்களும் திசுக்களும் உருவாக, சக்தியை புதுப்பித்துக் கொள்ள வைட்டமின்-12 போன்றவை கிடைக்க ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு வரலாம். ரொட்டிதுண்டுகளை வெண்ணை, ஜாம் இல்லாமல் சாப்பிட்டால் மிக சிறந்த சக்திமிக்க உணவாக அமையும். அதேபோல் சோர்வை அகற்றி வளர்ச்சிக்கும், மன இறுக்கத்தை அகற்றி நோயை குணமாக்கும் இரும்புச் சத்து, மத்திய நரம்புமண்டலம் சுறுசுறுப்பாகவும், வளர்சிதைமாற்றம் சீராக இருக்கவும், மற்றும் நியாசின் வைட்டமினும் ரொட்டித்துண்டுகளில் உள்ளன. நரம்புகளுக்கு வலுவும் தந்து உடலைப் பெருக்காமல் பார்த்துக்கொள்ளும் கால்சியம், எளிதில் ஜீரணமாக உதவும் நார்ச்சத்தும் இந்த ரொட்டித் துண்டுகளில் உள்ளன. ரொட்டிதுண்டுகளில் வெண்ணை, ஜாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பருமனாகும். அதற்குப் பதிலாக பாலில் நனைத்துச் சாப்பிடலாம். ரொட்டியில் நார்ச்சத்து இருப்பதால் நீண்டநேரம் பசிஎடுக்காது. நல்ல புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

குழந்தைகளின் புத்துணர்ச்சிக்கு...

குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்காவிட்டால் அவர்கள் பல்வேறு நோய்களின் பிடிகளுக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக சிறிய குழந்தைகள் வயிற்றுப்போக்கு, பேதி போன்றவற்றால் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டால் துத்தநாக உப்புள்ள உணவு மற்றும் மருந்தை கொடுத்தால் அந்தக் குழந்தை உடனே புத்துணர்வுபெறும். மேலும் இது ஆண்டிபயாடிக்காகவும் உடலில் செயல்படுகிறது. பழங்களுடன் காய்கறிகளும் நன்கு சேர்த்துக்கொண்டால் அவர்கள் உடலில் துத்தநாக உப்பு குறைவாகவே இருக்கும்.நாரில் உள்ள பைட்டிக் அமிலம், துத்தநாக உப்பை உறிஞ்சி வெளியேற்றிவிடும். எனவே டாக்டரின் ஆலோசனைப்படி துத்தநாக உப்பை, மாத்திரை அல்லது உணவாகச் சாப்பிடலாம். வாரம் இரண்டு நாட்கள் கடல் உணவு சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் துத்தநாக உப்பு கிடைத்துவிடும். தொற்றுநோய், ஜலதோசம் முத்லியன உடலில் துத்தநாக உப்பு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். வாரம் இருநாட்கள் அவித்த மீனைச் சாப்பிடுவதால் மிகவும் எளிதாக துத்தநாக உப்பைப் பெறமுடியும்.

திராட்சை தரும் அற்புத நலம் பற்றி அறிவோமா?

திராட்சை தரும் அற்புத நலம் பற்றி அறிவோமா?

தினந்தோறும் திராட்சையை சாறாகவோ, சாதாரணமாகவோ சாப்பிட்டு வந்தால் குணமடையும் நோய்கள் இதோ...

மஞ்சள் காமாலை

மார்பகப் புற்றுநோய்

இருதய நோய்

சிறுநீரகக் கோளாறு

புற்று நோய், இருதய நோயாளிகள் இனிப்பு சேர்க்காமல் திராட்சையை உடனுக்குடன் சாறாக மாற்றி அருந்தி வர வேண்டும்.

திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது?

காரப்பொருள்

மக்னீசியம்

நீர்

காரப்பொருள்

இரத்தத்திலுள்ள காரத்தன்மையை எதிர்கொண்டு சமனப்படுத்திவிடும்.

மக்னீசியம்

திராட்சையின் மூலம் மக்னீசியம் கிடைத்துக் கொண்டே இருப்பதால் மாரடைப்பு என்ற அபாயம் முழுவதும் தடுக்கப்படுகிறது.

நீர்

திராட்சையில் தண்ணீர் அதிகம். எனவே உடலில் எந்த உறுப்பிலாவது கடினமான அடைப்போ , சேமிப்போ இருந்தால் அதைக் கரைத்து உடனே வெளியேற்றிவிடும்.

விலை குறைந்த இவ்வரிய பழம் எல்லோரது பட்ஜெட்டுக்கும் ஏற்றது தானே! தினம் தினம் இதை உணவாகக் கொண்டு இதன் மருத்துவ மகத்துவத்தைப் பெற்று நலம் பெருவோம்.

என்ன பழக்கடைக்குப் புறப்பட்டாச்சா!!!!

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்

- ஆர் .கே. தெரஸா


இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.

சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி

சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்

இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கறிவேப்பிலையின் பயன்கள்

கறிவேப்பிலையின் பயன்கள் -திருமலை


சமையலுக்கு சுவையும், மணமும் ஏற்படுத்துவது தாளிக்கும் முறை தான். தாளிப்பின் ராணி எனப்படுவது கறிவேப்பிலை. வீடுகளில் சமையல் செய்யும் போது கறிவேப்பிலையை எண்ணையில் போட்டுத் தாளிப்பர். அப்போது ஒரு வித நறுமணம் வீடு முழுவதும் பரவும். நாம் சாப்பிடும் போது குழம்பு அல்லது கூட்டுகளில் கறிவேப்பிலை கிடந்தால் அதனை எடுத்து கீழே போட்டு விடுகிறோம். அது தவறு. இந்த கறிவேப்பிலையைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். மனிதனின் உடலுக்கு பல நன்மைகளை தரும் மருத்துவ குணமும் உடையது என்கிறார் ஸ்பைஸஸ் போர்டு பிரிவுச் செயலர்.

மேலும் கறிவேப்பிலையைப் பற்றி அவர் கூறும் போது, முராயா கோயனிகி என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட கறிவேப்பிலை இந்தியா, அந்தமான் தீவுப் பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டது. இது இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு மற்றும் பணப்பயிராக பயிரிடப் பெற்று வருகிறது என்கிறார்.

கறிவேப்பிலையில் 60 சதவீதம் நீர் சத்தும், 6.9 சதவீதம் புரதச் சத்தும், 5 சதவீதம் தாது உப்புக்களும், 6.3 சதவீதம் நார்ச் சத்தும் உள்ளன. இதிலுள்ள 'கோயினிகள்' என்ற வேதிப் பொருள் தான் மணம் ஏற்படுவதற்கு காரணம். தயாமின், நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமீன்களும் கறிவேப்பிலையில் உள்ளன என்கிறார் இவர்.

கறிவேப்பிலையின் இலைகள், வேர், வேர்ப்பட்டை என அதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் உடையவை. இதனுடைய மருத்துவப் பயன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. கறிவேப்பிலையை எடுத்து அதனுடன் தேங்காய் துண்டுகள், உப்பு, புளி சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுவை வெளியேற்றும். பசியைத் தூண்டும் தன்மையும் இதற்குண்டு என்கிறார்.

சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்தூரி மஞ்சள், கசகசா பட்டை போன்றவற்றை சேர்த்து அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறையும்.

கறிவேப்பிலை இலையில் சிறிது நீர் சேர்த்து சங்கைக் கொண்டு அரைத்து முகப்பருவில் தடவி வந்தால் பருக்கள் மறையும். தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நோய் குணமாகும்.

தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலை இலைகளை போட்டு கற்பூரத்துண்டு சிறிது சேர்த்து பாட்டிலில் ஊர வைத்து பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கறுப்பாக இருப்பதுடன், உடலில் உள்ள பித்தம் , கிறுகிறுப்பு போன்ற நோய்களும் மறையும்.

கறிவேப்பிலை இலைகளை மென்று தின்று வந்தால் வயிற்றுப் போக்கு குணமடையும் என அதன் மருத்துவ குணங்களை விவரிக்கிறார் ஸ்பைஸஸ் போர்டு பிரிவு செயலர்.

இஞ்சியின் அரும்பயன்கள் -திருமலை

ரைசோம் என்றும் சிஞ்சிபேரா என்றும் தாவரவியல் பெயரைக் கொண்ட இஞ்சிக்கு பூர்வீக நாடு இந்தியா. இந்தியாவில் பழங்காலம் முதலே உள்நாட்டு மருந்து தயாரிப்பில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது இஞ்சியைத்தான். இயற்கையின் சிறந்த கிருமி நாசியாக இஞ்சி கருதப்படுவதால் மக்களிடம் இஞ்சிக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது என்கிறார் ஸ்பைசஸ் போர்டு அதிகாரியான முகந்தன்.

இது குறித்து மேலும் அவர் கூறும் பொழுது.............

"கேரளம், மேகலயா, ஆந்திர பிரதேசம் மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் பயிரிடப்படும் இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லாக் கால நிலைகளிலும் விளையக் கூடிய இஞ்சி கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோசம், முச்சு அடைப்பு, தலைசுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வையும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் இயற்கையின் மருந்தாக இஞ்சி விளங்குகிறது" என்கிறார் முகந்தன்.

இஞ்சியை இன்னும் பல விதங்களில் பயன்படுத்தலாம் என கூறும் இவர் சில வழிகளையும் சொன்னார்:

1. ஒரு எலுமிச்சைப் பழச்சாறு சிறிது இஞ்சிச் சாறு அதனுடன் சிறிது தேன் கலந்து வெண்ணீரில் கலந்து அதனை இரவு படுக்கைக்குப் போகும் முன் குடித்து வந்தால் ஜலதோசம், மூக்கடைப்பு, தலைவலி போன்ற நோய்கள் பக்கத்திலேயே வராது. அதே போல் உடலுக்கு உற்சாகத்தையும் தரும்.

2. இஞ்சிச் சாறுடன் தேன் மட்டும் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறண்ட நாக்கு, இருமல் போன்ற நோய்கள் வராது.

3.பச்சை இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி,சிறிது துளசி சேர்த்து அதனை வெந்நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் இக்கலவை நன்கு கொதித்த பின் அதனுடன் சிறிது டீ துாள், இனிப்பு போட்டு வடி கட்டினால் நறுமணத்துடன் கூடிய இஞ்சி டீ கிடைக்கும். காய்ச்சல் தொண்டை வலி போன்றவை விரைவில் குணம் அடையும்.

4. கோடை காலத்தில் இஞ்சி சோடா தயாரித்து சாப்பிடுவதும் வீடுகளில் சமையல் செய்யும் பொழுது செய்யப்படுகின்ற பொறியல் அனைத்திலுமே முடிந்த அளவு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பயன்படுத்துவது நல்லது .

பல ரகங்களைக் கொண்ட இஞ்சி வகைகளை வேளாண்மைத்துறை அறிமுகப்படுத்தினாலும் இந்தியாவில் வரதா ரக இஞ்சி தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. 6 மாத காலங்களில் விளையக் கூடிய இந்த இஞ்சி இந்தியாவில் 75000 கெக்டேர் நிலப்பரப்பில் 65000 டன் விளைவிக்கப் படுகிறது. இதனைப் பொது மக்கள் தங்களின் வீட்டுத் தோட்டத்திலும் பயிரிட்டு பயன் பெறலாம்.

இஞ்சியை நன்கு உலர வைத்தால் கிடைக்கின்ற பொருள் தான் சுக்கு. இஞ்சியில் இருந்து கிடைக்கின்ற இந்த சுக்கும் பல வித மருத்தவ பயன்களை அளிக்கக்கூடியது.

நாகரிக உலகில் நாகரிகம் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் நவீன மருந்துகளை நாடிச் செல்லாமல் இயற்கையின் பாரம்பரிய கொடையான இஞ்சியை முடிந்த அளவு பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுவோம். நோய் நொடி இல்லாமல் வாழ்வோம் என்கிறார் ஸ்பைசஸ் போர்டு அதிகாரியான முகந்தன். ஸ்ரீ

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்

வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்




வயிற்றில் தங்குகின்ற மிகுவாயு( Excess gas )தான் ஏப்பம், வாயு வெளியேறுவது போன்ற தொல்லைகளுக்குக் காரணம்.

தவறாக மூச்சுவிடும் முறையினாலும், அவசர அவசரமாகச் சாப்பிடுவதாலும் மடக், மடக் என்று தண்ணீர் குடிப்பதாலும் ஆக்சிஜன், நைட்ரஜன் அதிகமாக வயிற்றிற்குள் சென்று விடுகின்றன. கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் பெருங்குடலில் உள்ள பாக்டிரியாக்களால் உண்டாகின்றன. இவை ஏப்பமாக வெளியேறுகின்றன.

பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை போன்ற புரதப்பொருட்கள் ஒவ்வாத காற்றைப் பெருங்குடலினுள் ஏற்படுத்துகின்றன. இக்காற்றில் அமோனியா போன்ற வாயுக்கள் அதிகமிருப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.

ஏப்பம், வாயுத் தொல்லையிலிருந்து விடுபட:

1. இரைப்பைக்கும், குடலுக்கும் தேவையான யோகாசனம் செய்யலாம்.

2. உடற்பயிற்சி, தூித நடை, ஓட்டம், நீச்சல், டென்னிஸ், வீட்டில் இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டால் இரைப்பையும் நன்கு செயல்பட்டு ஹார்மோன்களைச் சுரப்பதால் காற்று தங்காமல் வெளியேறிவிடும்.

3. புரதம் அதிகம் உள்ள பயறு வகைகளைச் சாப்பிட்டாலும் மேற்கண்ட பயிற்சிகளினால் வாயுத்தொல்லை குறையும்.

4. வெள்ளைப்பூண்டு, வெந்தயம், இஞ்சி, புதினா, இளநீர், தேன் இந்த ஆறும் உணவு வகைகளை நன்கு செரிக்கச் செய்து பெருங்குடலுக்குள் தள்ளி விடுகின்றன. இதில் காற்று அதிகமாக உற்பத்தியாவது தவிர்க்கப்படுகிறது.

5. வயிற்றை அமுக்குவதுபோல் உடையணிந்தாலும், வாயுத்தொல்லை ஏற்படும். எனவே தளர்வாக உடை அணியவும்.

6. அடிவயிற்றில் நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்வது போல சில நிமிடங்கள் செய்துவிட்டு குளிப்பது நல்லது.

ஏப்பம், வாயுத்தொல்லையை நீக்கும் 14 உணவு வகைகள்

1. சோயாபீன்ஸ், 2. வேர்க்கடலை,3. பாதாம்பருப்பு 4. பட்டாணி 5. பால் 6. பார்லி 7. தேங்காய் 8. தினைமாவு 9.பாசிப்பருப்பு 10.கறிவேப்பிலை 11. முருங்கைகீரை 12. மொச்சை 13. அளவான வெற்றிலை பாக்கு

இந்த 14 வகை உணவுகளைச் சேர்த்து வந்தல் ஏப்பமும், வாயுத்தொல்லையும் காணாமல் போய்விடும்.

போன்ஸ் டிப்ஸ் : தண்ணீரை ஸ்ட்ராவில் குடிப்பது பொல் 'சர்' - எனக்குடித்தால் வயிற்றுனுள் காற்று போகாமல் இருக்கும். பயம், கவலை, மனவருத்தம் போன்றவற்றாலும் ஜீரணம் தடைபட்டு அதிகமான காற்று உற்பத்தியாகும்.

எனவே வீண்பயம், கவலை, வலி, வேதனை யாவற்றையும் மறந்து 'அவன் விட்ட வழி' என்றிருந்தால் உடல் தொல்லைகளைத் தவிர்க்கலாமே.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

நன்மை தரும் 7 வகை பானங்கள்

நன்மை தரும் 7 வகை பானங்கள் ஆர்.கே.தெரசா




பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்:

துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு: டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்

இதயநோய்கள் வராமல் தடுக்க

இதயநோய்கள் வராமல் தடுக்க -ஆர்.கே.தெரசா




இதய நோய்கள் வராமல் தடுக்க குறித்த நேரத்தில் வேலைக்குக் கிளம்ப, சாப்பிட, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட குடும்பத்தாரிடம் கலந்து பழக என நேரத்தை திட்டமிடுங்கள்.

பதட்டத்திற்கு இடம் தராதீர்கள். பிரயாணம் செய்யும் முன்பே பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என அந்த அந்த இடங்களுக்கு முன் கூட்டியே சென்று விடுவது நல்லது. அப்படி சரியான நேரத்திற்கு செல்லாமல் வண்டிகளை தவற விட்டு விட்டாலும் கவலைப்படாமல், புலம்பாமல் அடுத்த வண்டிக்குச் செல்லங்கள்.

கனமான பொருட்களை நின்றுகொண்டே தூக்காமல், உட்கார்ந்து கொண்டு தூக்குங்கள். இது இதயத்திற்கு நல்லது.

உணவு உண்ணும் பொழுது ரசித்து ருசித்து உண்ணுங்கள். சாப்பிடும் பொழுது கவலைதரும் பேச்சுக்கள் பேச வேண்டாம்.

நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கி எப்பொழுதும் கலகலப்பாக இருங்கள் . தனிமையை தவிர்க்கவும்.

திடுக்கிடச் செய்யும் விஷயங்களில் நிதானமாக செயல்படவும்.

இரவு படுக்கச் செல்லும் பொழுது நடந்தவைகளை, நடக்கப்போறவைகளை பற்றி சிந்திக்காமல் மனதை வெறுமையாக்கி நிம்மதியாக தூங்குங்கள்.

புகை பிடித்தல், மது அருந்துதல் கட்டாயம் கூடாது.

வயது எதுவானலும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் காலை மற்றும் மாலையில் கட்டாயம் நடை பயிற்சி அவசியம்.

ஸ்கூட்டரில் செல்வதற்குப் பதில் சைக்கிளில் செல்வது மிக நல்லது.

புத்தம் புதிய பழங்கள், நார்சத்து மிகுந்த காய்கறிகள் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

உணவுப் பொருளில் வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை தேவையானல் மிக சிறிய அளவு சேர்க்கவும் பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. தோல் நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சி வகைகளை தேர்ந்தெடுத்து வேகவைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்தச் சாப்பிடுவது கெடுதி. முட்டையிள் வெண்கருவை சாப்பிடலாம். மஞ்சல் கருவை தவிர்ப்பது நல்லது. சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், சோயபீன்ஸ் எண்ணெய்களைப் அளவோடு பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச் சாறுகள், பால் சேர்க்காத கடும் டீ, காபி இவைகளை சாப்பிடலாம். சர்கரைக்குப் பதில் பாதிப்பை ஏற்படுத்தாத பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பது நல்லது.

ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுவது நல்லதல்ல. வீட்டில் எளிமையாகச் சமைத்து உண்பதே நல்லது. 'சாட்" உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை பழக்கக் கூடாது.

ஆண்கள் 35 வயதிலும், பெண்கள் 40 வயதிலும் கட்டாயமாக இதய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கொரு முறை இ.சி.ஜி. எடுத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் இதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடல், உள்ளம், உணர்வுகள் அமைதி கொள்ள யோகா செய்வது நல்லது. மனதிற்கு அமைதி, முறையான வாழ்க்கை, ஆபத்தில்லா இயற்கை உணவு, தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் ஆகியன இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுணர்கள்.


Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

கிச்சன் டிப்ஸ் -ஆர்.கே.தெரசா

கிச்சன் டிப்ஸ் -ஆர்.கே.தெரசா




முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.

தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.

மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.

ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..


Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்

இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள் -ஆர்.கே தெரசா


இஞ்சியின் இயல்பு

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. ஃ

மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)

இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.

வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்:

உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.

இதய அடைப்பை நீக்கும்.

இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

தாய்ப்பால் சுரக்கும்.

மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.

சளித்தொல்லை நீங்க:

1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.

2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.

3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.

காது அடைப்பு, வலி நீங்க:

நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.

குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

கையிலேயே இருக்கு மருந்து!

கையிலேயே இருக்கு மருந்து! - ஆர்.கே.தெரசா


1. கறிவேப்பிலை செடிக்கு புளித்த மோரை நீருடன் கலந்து ஊற்றி வர செடி நன்கு துளிர்த்து வளரும்.

2. அருகம்புல்லில் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது . அந்தச் சாற்றில் தாது உப்புகளும் , வைட்டமின்களும் அதிகம்.

3. கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி , குமட்டலைத் தடுக்க பாலில் முட்டையின் வெண்கருவையும் , சிறிது சோடாவையும் கலந்து சாப்பிடவேண்டும்.

4. பொரித்த உணவுப் பண்டங்களை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ஒரு ரொட்டித் துண்டைப் போட்டு வைத்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்து போகாமல் இருக்கும்.

5. மகிழம் பூவை நிழலில் உலர்த்தி சந்தனம் சமமாகச் சேர்த்து இடித்து பூசி குளித்தால் சூடு தணியும் ˆ£ரண சக்தி பெருகும் . உடல் பலப்படும் . உடல் வலி நீங்கும் . புண்கள் குணமாகும்.

6. ஆறிய வெந்நீரில் விபூதியை குழைத்து நெற்றி , மீக்கின் மேல் பூசிக்கொண்டால் ஜலதோஷம், தும்மல் Å¢ரைவில் குணமாகும்.

7. ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி வெது வெதுப்பான நீரில் போட்டு வைத்து பின் அத்தண்ணீரால் வீட்டைத் துடைத்தால் ஈ , எறும்பு அண்டாது.

8. செம்பருத்தி இலையை உலர வைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டு வாரம் மூன்று முறை இப் பொடியைத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.

9. புதினா இலையை சாறு எடுத்து குளிக்கும் முன் அரை மணி முகத்தில் தேய்த்து ஊறிய பின் குளித்தால் முகத்தில் சுருக்கம் வராது.

10. இரவு நேர விளக்கு நீல நிறமாக இருந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகளிக்கும் அமைதியும் சக்தியும் கிடைக்கும். எனவே படுக்கையறையில் நீல நிற விளக்கைப் பயன்படுத்தலாமே!

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

நலம் தரும் பழங்கள்

நலம் தரும் பழங்கள் - ஆர்.கே.தெரசா


பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.

4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.

5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

ஆரோக்கிய டிப்ஸ்,இனிய இல்லம் (சுட்டதுதான் கோபபடாதீங்க)

40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

ஆண்களும் சரி பெண்களும் சரி 40 வயதை தாண்டிய பின்பு உடலில் சில மாற்றங்கள் வரும். உடல் தளர ஆரம்பிக்கும். இந்த வயதில் சில டெஸ்டுகள் செய்து கொண்டால் பல நோய்களின் ஆரம்ப நிலையிலே தெரிந்து அதனை சரி செய்து பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.

பிஸிக்கல் எக்ஸமினேஷன் மூலமாக தைராய்டு டெஸ்ட், மார்பக புற்று நோய் கண்டறியலாம்.

பாப் ஸ்மியர் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பையில் தோன்றும் ஆரம்ப கால கேன்சர் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். இந்த நோய் அதிகமாக பெண்களுக்கு வருவதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்வது நலம்.

இரத்த டெஸ்ட் மூலம் இரும்பு சத்து குறைவு, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ் இருக்கானு டெஸ்ட் செய்யலாம்.

யூரின் டெஸ்ட் டயபடீஸ், யூரினரி இன்பெக்க்ஷன்,சால்ட் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷன் டெஸ்ட் இந்த டெஸ்டின் மூலமாக "ப்ரோசைட்டிக்கில்" இன்பெக்க்ஷன் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம். அதோடு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்
வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.




இசிஜி
இரத்த குழாய் அடைப்பு, ஹார்ட் அட்டாக் வரவாய்புகள் இந்த வயதில் அதிகம் அதனால் இந்த டெஸ்ட் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கானு தெரிந்து முன்னேச்சரிக்கையாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் பரிசோதனை
தவறான உணவு பழக்கங்களால் இந்த நோய் வர வாய்பிருக்கு. உடலில் தேவையில்லாத கொழுப்புகள் இருப்பது தெரிந்துவிடும். பிறகு நாம் டயட், எக்ஸர்சைஸ் மூலமாக சரி செய்துவிடலாம்.

இது தவிர கண்கள்,பற்களையும், பி.பி செக் அப்டெஸ்ட் செய்வது நலம்

மேலே சொன்ன டெஸ்டுகள் மூலம் நாம் ஓரளவு நம் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடித்து சுலபமாக குணப்படுத்திவிடலாம்.


உடல் நலம் வெங்காயம் சாப்பிடவும்:

நம் நாட்டு சமையலில் முக்கியமான பொருளாக அதிக உணவில் சேர்ப்பது வெங்காயம் தான்.

வெங்காயத்தில் பல நல்ல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

வெங்காயம் மிகச் சிறந்த கிருமி நாசினி.
இதனை 3 நிமிடங்கள் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி,ரத்தம் உறைதல், ரத்த அடைப்பு ஆகியவற்றை நீக்கி ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிறது.

பொறித்த சிக்கன் உணவுகளுடனும் மற்றும் நான் - வெஜ் அயிட்டங்களுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் உடலின் ஜீரன சக்கிதியினை தரும்.




பித்ததால் வரும் தலைச்சுற்றல், வாதம், ஈரல் கோளாறுகள், இரத்த சோகை பேன்றவற்றிற்க்கு வெங்காயம் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

மூல வியாதியால் அவதி படுபவர்கள் வெங்காயத்தை சிறிது நெயில் வதக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வெங்காயத்தில் புரதம், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் இருக்கிறது.

பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் கூடுதல் சக்தி உள்ளது

மின்சார சிக்கனம்
இன்றைய காலகட்டத்தில் மின்சாரத்தையே காணம், மின்சார சிக்கனம் பற்றி எழுதவந்துடாங்க என்று தானே நினைக்கிறிங்க.
இருந்தாலும் நம்மால் முடிந்தவரை சிக்கனமாக இருந்தால் நம்ம மாத வருமானத்தில் மிச்சம் பிடிக்கலாமுல..

வீட்டில் 3 ரூமிருந்தால் எல்லா நேரமும் தனி தனியாக ரூம்மில் இருக்காமல், அனைவரும் ஒன்றாய் ஒரே ரூம்மில் இருங்க. மிக முக்கிய தேவைக்கு மட்டுமே தனியாக இருங்கள்.
சில வீடுகளில் அடுப்படி மற்றும் பூஜை ரூமில் மாலை நேரங்களில் கட்டாயம் லைட் எரியனும் என்று சொல்லூவங்க. நீங்கள் பயன் படுத்தாத அந்த நேரங்களில் 0 வாட்ஸ் பல்பை போட்டு வைக்கவும்.
வீட்டில் பாத்ரூமில், டாய்லெட்டுகளில் 40 வாட்ஸ் அல்லது 60 வாட்ஸ் குண்டு பல்பு போட்டுவாங்க அதனை எடுத்துவிட்டு மின்சார சிக்கனம் தரும் சின்ன டியூப் லைட்டை போடவும். (பாத்ரூம் போயிட்டு வந்தவுடன் மறக்காமல் லைட்டை ஆப் செய்யவும்)
இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்கும் பொழுது டேபிள் லேப்பை பயன்படுத்தலாம்.
அடுப்படியில் மிக்ஸி, கிரைண்டர் எல்லாவற்ரையும் தேவைக்கு பயன்படுத்துங்கள். இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்விழுது எல்லாம் மொத்தமாக 1வாரத்துக்கு அரைத்து ஃப்ரிஜில் வைத்து பயன்படுத்தவும்.


ஏஸி யினை இரவு முழுவதும் ஓடவிடாமல் 3 மணிநேரம் ஓடவிட்டு பின்பு பேனை போட்டுவிடவும்.
ஏஸி ஆன்னாகியிருக்கும் பொழுது கட்டாயம் ரூம்மை அடைத்தே வைக்கவும். அடிக்கடி திறந்து வெளியே போனால் ஏஸி ரூம்மில் இருக்காது. பவர் செலவு அதிகமாகும்.
இதனை போல் ஏஸி யை 26 டிகிரியில் வைக்கவும். அப்பொழுது தான் மின்சாரம் கம்மியாக இழுக்கும்.
ஃபிரிஜை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்கவும். தேவையான பொருட்களை முழுதும் ஒரே நேரத்தில் எடுத்து வைக்க பழகவும்.
ஹீட்டரை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும். சிலர் ஆன் செய்துவிட்டு மறந்துவிடுவாங்க. அது போல் ஒரு வாளி தண்ணிருக்கு 1 மண்நேரம் ஆன் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.
மின்சார பொருட்கள் வாங்கும் பொழுது நல்ல கம்பெணி பொருட்களை மட்டுமே பார்த்துவாங்கவும்.
வீட்டில் அதிகவெளிச்சம் வேண்டும் என்று மெர்குரி பல்லை போடாதிங்க. பவர் அதிகமாக இழுக்கும்.
கம்ப்யூட்டரின் மானிட்டரை தேவைக்கு மட்டுமே ஆன் செய்யுங்கள்.
இதனை போல் முடிந்த வரை சிக்கனமாக இருந்தால் நிச்சயம் மாதம் 200 ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.




திருமணமான பெண்களுக்கு வரும் முதுகு வலி... (பெண்களுக்கு மட்டும்)

பல பெண்களுக்கு அதிகமாக முதுகு வலியால் அவதி படுறாங்க.. என்ன காரணம் என்று தெரியாமலே கண்ட கண்ட மாத்திரையினை போடுவாங்க. அந்த நேரத்தில் மட்டுமே சரியாகும் ஆனால் மீண்டும் வந்து தொல்லை தரும்.
அதற்க்கு காரணம் என்வென்று ஒரு குழு ஆராய்ந்தாங்க..

இந்தியாவில் 80% பெண்களுக்கு தம்பத்தியத்தில் முழுமையான இன்பம் பெறவில்லை என்றும் அதற்கு அவர்களின் வேலை பளூவும், மற்றும் ஆண்களின் அவசரமும் இதற்கு முக்கிய காரணம். இதனால் பெண்களுக்கு திருப்தி இல்லாமால் போகிறது என்று காரணம் சொல்லுறாங்க.


இது போல் வேலைக்கு போகும் ஆண்களும் பெண்களும் வீட்டுக்கு வந்தவுடன் மிகவும் சோர்ந்து போய் தூங்கினால் போதும் என்று நினைக்கிறாங்க.. ஆகையால் பல நாட்கள் தம்பதியத்தில் ஈடுபடுவதில்லை. எப்போ ஒரு முறை சேர்வதால் இந்த வலி ஏற்படுகிறது.
இது தவிர ஹை- ஹீல்ஸ் போடுவதாலும் முதுகு வலி ஏற்படும்.

இதற்கு ஓரே தீர்வு பெண்கள் கணவரிடம் அன்பாய் ஆதரவாய் பேசி அவங்களை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கவும். வேலையில் இருந்து வந்தவுடன் அதிக தொல்லை கொடுக்காமல் சந்தோஷமாக சிரித்து பேசுகள். ஏதோ கல்யாணம் முடிந்தது ஏதோ இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்ற கட்டாயத்தில் கடமைக்கு கணவருடன் சேர வேண்டாம். பிறகு முதுகு வலியால் கஷ்டபட வேண்டாம்.
தொடர்ந்து அதிக முதுகு வலியிருந்தால் மருத்துவரை அனுகி தீர்வு காணவும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு
(குழந்தை பிறப்பை தள்ளிப் போடுபவரா நீங்கள்..?)

திருமணம் ஆன புதுமண தம்பதியர்களுக்கு வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்..


திருமண வாழ்க்கை இனிமையாக இருக்குது என்பதை அடையாளம் காட்டுவது முதலில் வரும் குழந்தைச் செல்வம் தான்.
ஆனால் சில புதுமண தம்பதியர்கள் நாங்க சந்தோஷமாக இருக்கோம் இப்ப இடையூராக குழந்தை வேண்டாம் என்றும், ஒருத்தரை ஒருத்தர் புரிந்துக்கொள்ளனும், அப்பறம் நல்ல சம்பாதிக்கனும், லைப்பில் உயர்ந்து இருக்கனும் என்று சப்ப காரணம் சொல்லி குழந்தை செல்வத்தை தள்ளி போடுறாங்க.
முக்கியமன காரணம் என்றால் அதிகமாக ஒருவருடம் தள்ளி போடுங்க. அதுவும் மருத்துவரின் ஆலோசனை படிதான். (ஆனால் மருந்துகளையும், ஊசியினையும் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து) (குழந்தை உண்டானால் அபாஷன் செய்ய வேண்டாம்.)


30-35 வயதுக்குள்ளே குழந்தை பெற்று முடித்துக் கொள்வது நல்லது. இந்த வயதில் தான் பெண்களின் உடல் நிலை சிறாகவும், கருமுட்டையின் வளர்ச்சியிருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து நார்மல் டெலிவரியாகும்
நாள் செல்ல செல்ல உடல் நிலைகள் மாறிவிடும். வயதும் ஏறிவிடும். குழந்தையினை பார்ப்பதில் சிரமம் ஆகிவிடும்.



குழந்தையாக இருக்கும் பொழுதுக்கூட நமக்கு ஒன்றும் தெரியாது குழந்தை பெரியவங்களாக ஆனபின்பு படிக்கும் பொழுதும் திருமணம் ஆகும் பொழுதும் நாம் அப்பா அம்மா மாதிரி இருக்க மாட்டோம் தாத்தா, பாட்டி போல் ஆகிவிடுவோம் அவங்களுக்கு நம்மால் ஏதுவும் உதவி செய்யமுடியாத நிலையாகும்.. (பேரன் ,பேத்திகளை யாரு பார்ப்பார்கள்..?) இதனால் தலைமுறை இடைவெளியாகிவிடும்.
வயது ஏறிய பின்பு குழந்தை பிறப்பதால் தாயுக்கும் ,சேய்யுக்கும் நிறைய உடல் உபாதைகள் ஏற்ப்படும்.
சிலருக்கு குழந்தை பிறப்பதிலே பிரச்சனைகள் வரலாம்.இதானால் நாள் போக போக கணவர் மனைவிக்குள் பிரச்சனைகள் வரலாம். மன கஷப்புகள் ஏற்படலாம்.
கடவுளின் அருள் குழந்தை வரம் அதனை அவன் தரும் பொழுது வாங்கிக்கொள்ளவும். நாம் தேடுகிற நேரத்தில் நமக்கு கிடைக்காமல் போய்விடும். ஆகையால் சரியான வயதில் குழந்தை பெற்று உங்கள் குழந்தைகளை அழகாக சந்தோஷமாக வளருங்கள்.
உங்கள் வயதான காலத்தில் உங்கள் குழந்தைகள் வளர்ந்து நல்ல நிலையில் இருப்பாங்க.அவங்க உங்களை பார்ப்பாங்க நீங்கள் பேரன் பேத்தியுடன் சந்தோஷமாக இருங்கள்..

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!(பகுதி 1)
நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே
உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளார்கள்

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண
டெஸ்டில் தெரிய வராது, அவை
சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின், டாக்டர்
நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான
அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில்
உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான
செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக
இருக்கும்போது கேன்சருக்கான செல்
அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்
(tumors) ஏற்படுவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து
குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு
மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.
5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து
குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான
சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை
மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை
போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம்,
மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான
செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.
8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின்
(tumor) அளவைக் குறைக்க
செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை
கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.
9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது
அழிக்கப் பட்துவிடும். இதனால்
மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.
10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள்
எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில்
அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள்
மற்ற இடங்களில் பரவ ஒரு
காரணமாகி விடுகிறது.
11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள்
பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை
நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.
12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக
நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது.
ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.
13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை
தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது
சக்தியை கேன்சர் செல்லின்
கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer
cells) கேன்சர் செல்லை
அழிக்க உதவியாகிறது.
14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs
etc, போன்றவை
நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's
own killer cells) மூலம்
கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள
பாதிக்கப்பட்ட, தேவையற்ற
செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like
vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing
of damaged, unwanted, or unneeded cells)
15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit)
நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை
அளிக்கிறது. கோபம், மன்னிக்கும்
மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின்
அமிலத்தன்மையையும்
அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
ஆசுவாசப்படுத்திகொள்ளவும்,
வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.
தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த
சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியானது
(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.
ஆன்மையினை அதிகரிக்கும் முருங்கைக்கீரை:
இது தெரிந்த விஷயம் தானே என்று சொல்லுரிங்க. இதில் இருக்கும் மருத்துவ சக்தியினை பற்றி பலருக்கு தெரியாது..

இயற்கையால் வழங்கப்பட்ட ஊட்டப்பொருள் நிரம்பப்பட்டது தான் இந்த இலையும், காயும்.

முருங்கையின் இலை, காய், வேர், பூ, பட்டை இதில் உள்ள அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் சாறு உயிர் அனுவை விருத்தி செய்யக்கூடியது.

மருத்துவ குணங்கள்:
இந்த கீரையினை சாறை அதிகமாக சேர்த்துக்கொண்டால் ஆரம்ப நிலையில் இருக்கும் வாத நோய் குணமாகும்.
கண்களுக்கு மிகுந்த குளிர்சியும், தெளிவையும் தரும்.
இதன் சாரு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் குறைக்கும்.
இதன் பிஞ்சிக்காய் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து.
முருங்கை பூவினை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் ஏற்ப்படும் பலவினம் போகும்.
இதன் பட்டை மற்றும் வேரில் சுவாசம், வீக்கம்,கல்லீரல்,வாதம்,பக்கவாதம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது.
இந்த கீரையில் உயிர் சத்துக்களும், தாது உப்புகளும், நமக்கு தேவையான அமினா ஆசிடும் இதில் இருக்கு.



ரத்த சோகைக்கு (அனிமியா)
கால் கப் முருங்கை இலை சாறுடன் 1 கப் இளநீர் கொஞ்சம் தேனும் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடவும்.
கண்புறை சரியாக:
கால் கப் முருங்கையிலை சாறு 1ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை தினமும் சாப்பிடவும்.
பித்த சோகை:
குழந்தைகளுக்கு முருங்கைகீரையுடன் சிறுது பசு நெய் ஊற்றி வேக வைத்து தினமும் கொடுக்கவும்.
சர்க்கரை நோய்காரங்களுக்கு:
தினமும் ஏதாவது ஒரு வகையில் பூ,காய்,பட்டை,சாறு என்று உணவில் சேர்த்துக்கொள்ளவும். சர்க்கரையின் அளவு குறையும்.
நீர்கடுப்புக்கு:
கேரட் சாறு 25மில்லி,முருங்கையிலை சாரு இரண்டையும் கலந்து குடிக்கவும். உடல் தாகமும் அடங்கும் நீர்கடுப்புக்கும் நல்லது.


ஆன்மையினை தூண்டும்:
குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் (உடல் நிலையில் வேறு பிரச்சனையில்லாமல் இருப்பவர்கள்) தினமும் முருங்கைகீரை, காய், என்று உணவில் சேர்த்துக்கொண்டால் ஆன்மை சக்து உண்டாகும்.
காய்ந்த முருங்கவிதையினை தூளாக்கி இரவில் பாலுடன் சிறிது கலந்துக் குடிக்கவும்.
தோல் நீக்கிய முருங்கை விதையினை பாலில் போட்டு வேக வைத்து தேன் கலந்து சாப்பிடனும்.
பிபி குறைய:
காலையில் முருங்கைச்சாறு குடித்தால் குணம் கிடைக்கும்.
தாய்ப்பால் பெருக:
முருங்கைகீரை, தேங்காய்ப்பூ சேர்த்து சமைத்து அதிகமாக சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.
இதில் இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. ஆகையல் எப்படியாவது வீட்டில் சொல்லி தினமும் உணவில் இந்த முருங்கை குடும்பத்தை சேர்த்து சாப்பிடுங்கள். நோயில்லாமல் நீண்டு வாழ்க





இரத்த சோகை சரியாக:

சில பெண்களுக்கு இரத்த சோகை இருக்கும் அதனை சரி செய்ய இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடவும்.
தேன், பேரிச்சம் பழம் கலந்து சாப்பிடவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து ஜீஸ் சாப்பிடவும்.
அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து தினமும் குடிக்கவும்.
ஆட்டு ஈரல், சவரொட்டி அதிகமாக உணவில் சேர்க்கவும்.
கேரட் ஜீஸ் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.

சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள்:



இன்றைய காலகட்டத்தில் சத்தான உணவு சாப்பிடுவதன் மூலமே மட்டுமே நாம் நேய்கள் வராமல் காக்க முடியும்.
இரவு பகல் என்று வேலை அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேர இடைவெள்யில் கட்டாயம் உணவினை சாப்பிடவும்.
காலை உணவில் அதிகமாக காரமணி கடலை, உளுந்து, தட்டை பயிறு, மொச்சை, எள், துவரை, சுக்கு, மிளகு, கடுகு, வெங்காயாம் போன்ற உணவுகளை சேர்க்கவும்.
மதிய உணவில் கிழங்கு வகைகள், தானிய வகைகள், கீரைவகைகள், பச்சைகாய்கறிகள், மோர், தயிர், வெண்ணெய், நெய் சேர்த்து செய்யவும்.
இரவு உணவில் காய்கறிகள், மற்றும் பழங்கள், பால் சேர்த்து சாப்பிடவும்.
இப்படி சாப்பிட்டால் நோய் நெடியில்லாம் வாழலாம்.

வெயிலுக்கு ஏற்ற பானம்


வெயில் அதிகமாக இருப்பதால் நாம் சாப்பிடும் உணவுகளில் தயிர் மோர் அதிகம் சேர்க்கவும்।
தயிருடன் சிறிது இஞ்சி, உப்பு கலந்து மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்।
தயிர் தண்ணீர், உப்பு போட்டு நன்றாக கலந்துபின்பு புதினா,கொத்தமல்லியினை அரைத்து இதனுடன் கலந்து அதனுடன் மிளகு சேர்த்து குடிக்கவும்। குளூமையாக இருக்கும்।
தயிருடன் வெள்ளரிக்காயினை தோல் நீக்கி சிறு சிறு துண்டாக்கி போட்டு அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு உப்பு கலந்து குடித்தால் சுவையாக இருக்கும்।
தயிருடன் 2கப் தண்ணீர் சேர்த்து சீனி, ஐஸ் கட்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்து லஸ்சியாக குடிக்கவும்।
தண்ணீரில் தனியா தட்டி போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் சர்க்கரை பால் சேர்த்து வடிகட்டி டீக்கு பதிலாக குடிக்கலாம்।
பிரசவத்துக்கு பின்


ஆரோக்கியமாக குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிக பெரிய பிரச்சனை தழும்புகள் தான்॥


இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது ஆனால் நிச்சயம் கம்மி பண்ண முடியும்। அது போல் முதுகு,கால் வலிகள், வயிறு விரிதல் என்று பல பிரச்சனைகள் அதிகம் வரும்।


10மாதம் வயிற்றில் சுமந்து வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள், இடுப்பு எலும்புகள் விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்। இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வரும் இது இயல்பு தான்।


அதற்க்கு குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயில், அல்லது ஃப்ரேஜ் ஆயிலை அடி வயிறு கால் தொடைகளில் தேய்க்கவும்। கொஞ்ச நேரம் கழித்து வெது வெதுப்பான நீரை ஊற்றி குளிக்கவும்। (மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு ஆயில் தடவவும்)


இதோடு விட்டு விடாமல் குழந்தை பிறந்த பின்பும் அப்படியே 3மாதம் தொடர்ந்து செய்யுங்கள்।


தண்ணீர் ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக தண்ணீர் இருக்கனும்। இதில் ஆயூர் வேதிக் குளியல் பொடியும் கலந்து குளிக்கலாம்। இதன் மூலம் பெண்களுக்கு ஏற்ப்படும் உடல் அரிப்புகள் குறையும்।
தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும்।
இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும்। இதன் மூலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோகியம் அதிகமாகும்।
You might also like:
சின்ன குழந்தைகளுக்கு படிப்பு முதல் முதலாக கொலு வைக்கப்போறீங்களா? குழந்தைகளுக்கு தனி அறை: LinkWithin Posted by Mrs.Faizakader at 10:27 AM 4 comments
Labels: ஆரோக்கிய டிப்ஸ், பெண்கள் பகுதி Wednesday, May 20, 2009
வாஞ்ஜையுடன் வாஞ்ஜூர் அவர்கள் கூறிய பூண்டின் மருத்துவ குணங்கள்

இதையும் இணைதுக் கொள்ளுங்கள்।
1 .பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல்சரிவு குணப்படும்.
2 காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.
3 பூண்டு சாறினை வலிப்புவருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
4 இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.
5 டான்ஸில் என்கிறஉள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள்-அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டுசாறினை தடவி குணம் கிடைக்கும்.
6 பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
7 பூண்டில் பலவித மானசத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாகசமையலில் பயன் படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
8 பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.9 பூச்சிக்கடி, உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
10 பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
11 வெள்ளைப்பூண்டை தினமும்சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.12 பூண்டு சாப்பாட்டின் வாய் துர் நாற்றம் இருப்பது உண்மை. எனவே பூண்டை தவிர்க்காதீர்கள். பூண்டை சாப்பிட்டவுடன்கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
13 சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள். சளி போயே போச்சு.
14 வெள்ளைப் பூண்டைபாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.
15 பூண்டு கொஞ்சம் எடுத்துஅதே அளவிற்கு வெற்றிலையும் வைத்துச் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசிவைத்திருந்து நன்கு ஊறவிட்டுக் கழுவிவிட்டு, மறுபடியும் போட வேண்டும். மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்தே விடும்.
16 பூண்டை உணவில் அதிகம்சேர்ப்பவர்களுக்கு, மலேரியா நோய் வராத
17 வெள்ளைப்பூண்டை உணவில்சேர்த்தால் கொழுப்பு குறையும்.
18 கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலை, 4 வெள்ளைப்பூண்டுத் துண்டைச் சாப்பிடலாம
19 பூண்டு பல மருத்துவநன்மை கொண்டு இருப்பினும்கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.



பூண்டு சாப்பிடுங்க
சளி, ஜலதோஷம், இருமல், தலை பாரம் ஆம்மாப்பா ஆம்மாம் என்று சொல்லுறிங்களா? அப்ப தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்க.
நாக்கில் சுவையின்மை, பசி எடுக்காமை, வயிற்று உப்புசம், மலச் சிக்கல் போன்றவற்றுக்கும் பூண்டு நல்ல மருந்து
பூண்டு தினசரி சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடைந்த எலும்புகளைக் கூடச் சரி செய்யும் சக்தியும் அதற்கு உள்ளதாம்.
குடல் வாயு, சர்க்கரை வியாதி, மூலம், வாத நோய்களுக்கு பூண்டு சரியான மருந்தாகும்.
பூண்டின் மகத்துவத்துவம் அறிந்து அதை தினசரி உட்கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
ஆயில் உணவில் அதிகம் உபயோகித்தால் உங்கள் ஆயுள் குறையும்.
உணவில் அதிகமாக ஆயில் சேர்த்தால் சுவை கூடும் என்று நம் குடும்ப தலைவிகள் அதிகமாக ஆயில் சேர்த்து குடும்ப ஆயுளை குறைத்துக்கொண்டு இருக்காங்க.

ஆரோக்கியமானது ஆலிவ் எண்ணெய் தான் என்று வருமானத்துக்கு மிஞ்சி வாங்கவும் முடியாது.உணவில் எண்ணெய் இல்லாமலும் நம்மாள் சமையல் செய்யமுடியாது. ஆனால் அதன் அளவை கம்மி பண்ணமுடியும்


டீ.வி விளம்பரத்தில் மயங்கி கண்ட எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம். ஆரோக்கியமான ஆயிலை தேர்வு செய்து அதனை உபயோகிக்கவும்.
மாதம் 4 நபர் இருக்கும் குடும்பத்துக்கு 2லிட்டர் எண்ணெய் போதுமானது.
காலை டிபன் முடிந்த வரை வேக வைத்த உணவுகள் புட்டு, இடியப்பம், இட்லி, பயிறு வகைகளை சாப்பிடவும். இதன் ஷைடுடிஷ் எண்ணெய் குறைவாக இருக்கட்டும். சாலட் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்


எண்ணெயினை சிலர் தூக்கில் அல்லது எண்ணெய் கேனில் ஊற்றி வைப்பாங்க. அப்படி வைத்து பயன்படுத்தும் பொழுது நேரடியாக அப்படியே சட்டியில் எண்ணெய் ஊற்றாமல் ஒரு கரண்டியில் எடுத்து தேவைக்கு தகுந்தது போல் ஊற்றவும்.
தோசை செய்யும் பொழுது எண்ணெயினை சுற்றி வர ஊற்றினால் ஆயில் அதிகமாகிவிடும். அதர்க்கு பதில் ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வைத்து வெங்காயத்தினை முக்கி தோசைகல்லில் தேய்த்து பின்பு தோசை மாவு ஊற்றினால் சுவையும் அதிகமாக இருக்கும். அதிக எண்ணெயும் நம் உடலுக்குள் சேராது.
சப்பாத்தி சூடும் பொழுது எண்ணெயினை பயன்படுத்த வேண்டாம். சுக்கா சப்பாத்தியாக சாப்பிடலாம்.
பால்,மோர்,தயிர்,கீரை,காய்கறிகள் போன்றா உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.



சிக்கன் சமைக்கும் பொழுது குறைவாகவே எண்ணெய் சேர்க்கவும். சிக்கனில் இருந்தே நிறைய எண்ணெய் சமைக்கும் பொழுது வெளியாகும்.
மட்டன், பிரியாணி சமைக்கும் பொழுது நெய் அதிகம் சேர்த்தால் சுவை குறைந்து திகட்டிவிடும்.
சிக்கன்,மீன்,மட்டன்,பஜ்ஜி,பக்கோடா என்று டீப் ப்ரை செய்யாமல் அதர்க்கு பதில் அதிக எண்ணெய் இல்லாத தந்தூரி,கிரில் ஐயிட்டங்கள் சாப்பிடலாம்.

எண்ணெய்,நெய் அதிகமாக சேர்த்தால் இரத்தக் குழாய்களில் அடைப்புஏற்பட்டு ஹார்ட் அட்டாக் வரக்கூடும். இன்னும் பல நோய்கள் வரும் ஆகையால் நம்மால் முடிந்த வரை எண்ணெய் உணவுகளை ஓரமாக வைக்கவும்.
எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பின்பு கையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பினை போக்க சோப்பு போட்டு அலசினால் போகும்.
நம் உடலுக்குள் போகும் அந்த எண்ணெய் பிசுக்கை போக்க என்ன செய்யமுடியும்..?





ஹோட்டலில் உணவு சாப்பிடுபவரா நீங்கள்..?
இன்றைய நவநாகரிக உலகில் பெரிய பெரிய ஹோட்டலில் உணவு சாப்பிடுவது,சின்ன பார்ட்டி என்றாலும் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து அதனை ருசித்து சாப்பிடுவதும் இன்று கட்டாயம்மாகிய ஒன்றாகிவிட்டது.
வாரம் ஒரு நாள் வீட்டு பெண்களுக்கு ஓய்வு வேண்டும் என்று ரெஸ்டாரட் போகிறோம்.
இப்படி போவது ஒன்றும் தவறில்லை. அதில் கொஞ்சம் கவணமாக இருப்பது மிக முக்கியம் அல்லவா?


ஹோட்டல் போகும் முன்பு கவணிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:
நாம் தேர்வு செய்கின்ற ஹோட்டல் தரமானதாக இருப்பது மிக முக்கியம்.
அங்கு செய்கின்ற உணவு பண்டங்கள் தரமான எண்ணெயில் தயாரிக்கிறார்களா என்று முதலில் பாருங்கள். தரமில்லாத எண்ணெயில் செய்த உணவுகள் மூலம் வயிற்றில் கோளாறுகள் வரலாம்.
ஹோட்டல் உணவில் கண்களை கவரும் கலர் கலர் உணவு பொருட்கள் மற்றும் ருசியினை கூட்ட ஏதாவது கெமிக்கல் பொருட்களை கலந்து செய்வார்கள் அதில் நாம் மயங்கிவிடாமல் பார்த்து உணவுகளை ஆர்டர் செய்யவும்.
இந்த கெமிக்கல் மூலம் நம் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைந்துவிடும்.


உணவுகள் ஆர்டர் செய்யும் பொழுது:
முதலில் ஆரோக்கியமான சூப் ஆர்டர் கொடுங்க.
முதலில் ஹோட்டலில் உட்காந்தவுடன் பெரிய லிஸ்டாக நீங்களே ஆர்டர் கொடுக்காமல் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சூப் குடித்து கொண்டு கலந்து பேசி முடிவுசெய்து ஆரோக்கியமான உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.
நெய்ரோஸ்ட் என்று சொல்லும் பொழுதே அண்ணன் கொஞ்சம் நெய் கம்மியாக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுங்க. தேங்காய் சட்னிக்கு பதில் கொத்தமல்லி,புதினா,கறிவேப்பிலை சட்டினி தாங்க என்று கேளுங்கள்.
காபி,டீ ஆர்டர் செய்யும் பொழுது தேவையான சர்க்கரை அளவை சொல்லிவிடுங்கள்.


நாண்,பரோட்டா,குல்சா,சவர்மா போன்ற மைதா உணவுகளை குறைத்துக்கொண்டு கோதுமை உணவுகளை ஆர்டர் செய்யவும். அல்லது தந்தூரி ரொட்டி சாப்பிடலாம்.
சைவ பிரியர்கள் ஊறுகாயை ஒராம் வைத்துவிட்டு சாப்பிடலாம்.
பனீருக்கு பதிலாக தோஃபு உணவுகளை ஆர்டர் செய்யலாம்
இதை போல் காய்கறிகள் நிறைந்த காய்கறி சப்பாத்தி, காய்கறி ஊட்டப்பம் என்று சாப்பிடவும்.
அசைவ பிரியர்களுக்கு கலர் கலராய் பல உணவுகள் சுண்டி இழுக்கும் அதில் நாம் மிகவும் கவணமாக ஆரோக்கியமான ஐட்டங்களை மட்டுமே சேர்க்கவும்.
பொறித்த சிக்கன்,மீன்,மட்டன் என்று எண்ணெயில் பொறித்த உணவுகளை விட தந்தூரி அடுப்பில் செய்த உணவுகளை ஆர்டர் செய்யவும்.

பிட்ஸா,பர்கர் போன்ற உணவுகளை சிஸ் இல்லாமல் ஆர்டர் செய்யவும்.
என்றோ ஒரு நாள் தானே என்று பார்பதை எல்லாம் வாங்காதிங்க.ஆரோக்கியத்திலும் கவணமாக இருங்க



வெயில் காலங்களில் அதிகமாக தாக்குவது நீர்கடுப்பு தான் அதனை சரிசெய்ய,
நன்றாக மோர், அல்லது தண்ணீர் நிறைய குடிக்கவும்.
இன்னும் அதிகமானால் ஒரு டப்பில் வெதுவதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் நேரம் உட்காரவும். அல்லது தண்ணீரில் முழுகி குளிக்கவும்.
ஒவ்வொருமுறை பாத்ரூம் போனபின்பு, இரவு படுக்கும் முன்பும் வெது வெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு அந்த இடங்களை அல்சிவிட்டு படுக்கவும்.
பார்லி தண்ணீர், அல்லது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும். உடனே சரியாகும்.
ரொம்ப அதிகமானல் மருத்துவரை அனுகவும்.

சாப்பிட 12 விதிமுறைகள்

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.
நன்றி இனியஇல்லம்

சாப்பாடுக்கு பின்பு பழம் வேண்டாமே:

இன்று விருந்து பலமா? ஒரு பழம் சாப்பிடுங்க என்று சொல்லுவாங்க.
நம்மூர் பழக்கமே இது தானே.. ஆனால் இது பெரிய தவறு.
அப்ப பழங்களை எப்ப சாப்பிடனும் என்று கேட்கிரிங்களா?
சாப்பாட்டுக்கு முன்பு தான் பழங்களை சாப்பிடனும்.. அதுக்கான காரனம் இது தான்.

1.வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி கொண்டுவரும். இதன் பயனாக உடல் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

2.சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரமாகும் உணவுகள் செரிக்க நேரமாகும். உணவுகள் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் மற்றும் ஜீரணமாக உதவும் அமிலங்கள் சேர்ந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். வயிற்றுக்குள்ளே உணவு கெட்டுப் போகும். இதனால் தான் உணவுக்கு முன்பு சாப்பிடனும்.

3.பழஜீஸ் சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடவும். அப்படி சாப்பிடுவதால் நார்சத்து நிறைய கிடைக்கும் சத்தும் முழுமையாக கிடைக்கும்.

பார்க்க படிக்க சின்ன விஷயமாக இருந்தாலும் இது உடலுக்குள் சென்று செய்கின்ற வேலை மிக பெரியது. ஆகையால் இனி யோசித்து சாப்பிடுங்கள்
நன்றி இனியஇல்லம்

டீ சுவையாகவும் மணமாகவும் இருக்க

சுவையுடன் மணமும் கொண்ட டீ சாப்பிட எல்லோரும் விரும்புவார்கள். அதற்கு ஒரு யோசனை.
டீ சுவையாக இருக்க
பாலை நன்றாக காய்ச்சிய பிறகு சிறிது தோல் நீக்கிய இஞ்சி, ஏலக்காய் தட்டி போடவும். சிறிது நேரம் கழித்து டீ தூள் போட்டு இறக்கவும்.
புதினா டீ
பால் டீ அல்லது ப்ளாக் டீ போடும் பொழுது அதில் புதினா போட்டால் வாசனையாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்
காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும். பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து, காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து, பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும். (படித்தது)
தேயிலைத் தூள் மணக்க...
2 ஏலக்காயை உடைத்து டீத்தூளில் சேர்த்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது டீயில் போட்டு குடிக்கலாம். இதனால் டீ மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
டிகாஷன் தயாரிக்கும் போது...
டீத்தூள் போடுமுன் தண்ணீரில் ஆரஞ்சுத் தோல்கள் போட்டு அதில் டீ டிகாஷன் தயாரித்தால் சுவையும் மணமுமாக இருக்கும்.
டிகா‌ஷன் ஸ்டிராங்காக இருக்க...
ஒரே ஒரு கல் உப்பைப் போட்டு, காபிபொடி போட்டு டிகா‌ஷன் இறக்கினால் நல்ல ஸ்டிராங்கான டிகா‌ஷன் கிடைக்கும். (படித்தது)
சுக்கு மல்லி காபி:
சுக்கு, மிளகு,கொத்தமல்லி,நன்னாரி,திப்பிலி,வெந்தயம்,சீரகம்,பட்டை, கருபட்டி சேர்த்து ப்ளாக் டீ குடித்தால் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்
நன்றி இனிய இல்லம்


புகையிலை மூலம் வரும் நோயால் 100 கோடி பேர் இறப்பார்கள்


புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் நோய்களுக்கு இந்த நூற்றாண்டில் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பீடி, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு புகையிலைத் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துவதைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பலியாவோர் எண்ணிக்கையும குறைய வாய்ப்பில்லை எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.புகையிலைத் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 8 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்தாலும், அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பணமே புகையிலைக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.இது பற்றிப் பேசிய உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் டாக்டர் மார்க்கரெட் ஜான், "ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100 கோடி பேரின் உயிரைக் காப்பதற்கான தீர்வு நமது கையில்தான் உள்ளது' என்றார்.இந்த நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடுப்பு மருந்தோ சிகிச்சையோ இல்லை.ஆனால் அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் நினைத்தால் இதைச் சாதிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.இளைய சமூகத்தினர் புகைப்பிடிக்கத் தொடங்குவதைத் தடுப்பது, புகைப்பிடிப்போரை அப்பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வது போன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி technology

3வித்தியாசம் இருக்கு கண்டுபிடி